சுற்றுலா சென்றவேளை நிகழ்ந்த அனர்த்தம் : கடலில் காணாமற்போன மாணவன்
சுற்றுலா சென்றநிலையில் கடலில் நீராடியவேளை பாடசாலை மாணவர் ஒருவர், சைனா போர்ட் காவல் துறை பிரிவிற்குட்பட்ட மார்பிள் பீச் கடற்கரையில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளது.
மாவத்தகம, இங்குருவத்த பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய மாணவனே காணாமல் போனவராவார்.
மார்பிள் கடற்கரையில் நீராடி
தனியார் கல்வி நிலையத்திலிருந்து10 மாணவர்கள், 12 மாணவிகள், ஒரு ஆசிரியர் மற்றும் மூன்று பெற்றோர்கள் திருகோணமலையில் இருந்து சுற்றுலாவிற்கு பேருந்தில் புறப்பட்டு மாலையில் மார்பிள் கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்தனர்.
அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள்
அங்கு மூன்று மாணவர்கள் அலையில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர், அவர்களில் இருவரை விமானப்படை உயிர்காப்பு குழு மீட்டது, விசாரணையில் ஒரு மாணவர் அடித்து செல்லப்பட்டது தெரியவந்தது.
காணாமல் போன பாடசாலை மாணவனைக் கண்டுபிடிக்க விமானப்படை மற்றும் கடற்படையின் உயிர்காப்புக் குழுக்கள் மற்றும் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சீன துறைமுக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |