தானாக இயங்கிய துப்பாக்கி: சிறுமிக்கு ஏற்பட்ட நிலை
Sri Lanka Police
Sri Lanka
Hospitals in Sri Lanka
By Raghav
வெல்லவாய (Wellawaya) - அலுத்வெவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட மகுலுகஸ் பிரதேசத்தில் வீடொன்றை சுத்தம் செய்யும் போது துப்பாக்கி ஒன்று தரையில் விழுந்து தானாக இயங்கியதில் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இவ்வாறு காயமடைந்த சிறுமி தேவா ஹூயா பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஏழு வயது சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், வீட்டிற்கு துப்பாக்கி எவ்வாறு வந்தது என்பது தொடர்பிலும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்