சஜித் அணியில் ஏற்படப்போகும் பிளவு - மற்றுமொரு எம்.பி ரணிலுக்கு ஆதரவு
Dr Rajitha Senaratne
Ranil Wickremesinghe
Sajith Premadasa
By Sumithiran
ரணில் விக்ரமசிங்கவின் நிகழ்ச்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் நிகழ்ச்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை எனஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இரண்டு கட்சிகளுக்குமிடையில் கொள்கை வேறுபாடுகள் இல்லை எனவும் ரணில் விக்ரமசிங்க தற்போது முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணங்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணிலால் முன்னேற்றமடைந்த நாடு
ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றதன் பின்னர், பெரும் முன்னேற்றம் காணப்படுவதாகவும், நாட்டு மக்களும் விக்ரமசிங்க மீது மிகுந்த ஈடுபாட்டை கொண்டுள்ளதாகவும் சேனாரத்ன குறிப்பிட்டார்.
இணைந்து செயற்படுவது
அதன்படி, இரு தரப்பினரும் எவ்வாறு இணைந்து செயற்படுவது என்பது தொடர்பில் பேசி இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி