வெளியான பரீட்சைப் பெறுபேறு : யாழில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த மாணவி
Jaffna
Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Sathangani
யாழ்ப்பாணம் அராலி கிழக்கைச் சேர்ந்த மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவி குறைவான பெறுபேற்றினை பெற்றதாக தெரிவித்து பெற்றோர் கண்டித்த நிலையில் மாணவி தவறான முடிவெடுத்துள்ளார்.
தூக்கிட்டு தற்கொலை
சிவகுமார் பானுப்பிரியா என்ற 17 வயதான மாணவியே நேற்று 11 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி