கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது..!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
கிளிநொச்சி பகுதியில் இலங்கை கடற்படையினரும் காவல்துறையினரும் இணைந்து நேற்று (11) நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 01 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருளை விற்பனைக்காக எடுத்துச் சென்ற போது கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி சுமார் 6 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
35 வயதுடைய நபர்
சந்தேகநபர் முள்ளியன் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி