புலம்பெயர்ந்த தமிழர்களும் விடுதலை புலிகளும்
தென்னிலங்கை அரசியல்வாதிகளை நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதா என தெரியவில்லை என்று கவலையுடன் தெரிவித்தார் ஒரு அன்பர்.
ஏன் என்ன நடந்தது என்று கேட்டதற்கு கொழும்பில் ஒரு குண்டூசி விழுந்தாலும் அதுவும் பும்பெயர்ந்த தமிழர்களாலும் விடுதலை புலிகளாலுமே விழுந்தது என சொன்னாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்றார் அவர்.
தேர்தல் நடக்கும் முன்னர் ஒரு கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை(election manifesto ) வெளியிடும். அதில் அந்த கட்சியின் கொள்கைகள் உள்ளடக்கியிருக்கும். அதில் தாம் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தால் இதைச் செய்வோம் என்பதுவே அது.
அவ்வாறே அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் ஆட்சிக்கு வந்தது.தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டதை நடைமுறைப்படுத்துகிறது.
இறுதியாக மகிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி தங்காலை இல்லத்திற்கு சென்று விட்டார்.
இது அரசாங்கத்தின் ஒரு தேர்தல் வாக்குறுதி.
இதற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் என்ன ஐயா சம்பந்தம் என்று அவர் கேட்டார்.
இப்படித்தான் சிங்கள மக்களை தமிழருக்கு எதிராக முன்னர் உசுப்பேத்தி உசுப்பேத்தி புலி வருகிறது புலி வருகிறது நாடு அழியப்போகிறது என தமிழருக்கு எதிரான வன்மத்தை கக்கினார்கள்.
தற்போது உள்நாட்டுயுத்தம் முடிந்து 16 வருடங்கள் ஓடி விட்டன. இலங்கையில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கு புலம்பெயர் தமிழர்களுக்கும் நீங்களே அழித்ததாக கூறும் விடுதலை புலிகளுக்கும் என்ன சம்பந்தம் எனவும் அவர் கேட்டார்.
முன்னர் சிங்களவர்கள் தமிழர்களை கொன்றார்கள் தற்போது சிங்களவர்கள் மோதிக்கொள்கிறார்கள் இதற்கும் புலம் பெயர்ந்தவர்களா காரணம் என அவர் ஒருவித ஐயத்துடன் கேட்கிறார்.
இந்த அரசியல்வாதிகள் எப்பொழுதும் தமிழர்களை அன்னியவாதிகளாகவே பார்க்க விரும்புகிறார்கள்.
நல்லிணக்கம் என வாய் கிழிய அவர்களே கத்துகிறார்கள் பின்னர் இனவாதத்தையும் அவர்களே விதைக்கிறார்கள் என அவர் கூறுவதிலும் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்….?
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Sumithiran அவரால் எழுதப்பட்டு, 14 September, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
