போர்க்குற்றம் இடம்பெறவில்லை : பிரதி அமைச்சர் அருண ஜயசேரகவிற்கு வலுக்கும் எதிர்ப்பு

Sri Lankan Tamils Tamil National Alliance Janatha Vimukthi Peramuna Aruna Jayasekara
By Jaso Sep 14, 2025 12:30 PM GMT
Report

இலங்கையில் எந்த விதமான போர் குற்றங்களும் இடம்பெறவில்லை என்று பிரதி அமைச்சர் கூறிய விடயத்தை மிகவும் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை. போரின் போது நிகழக்கூடாத சில விடயங்கள் நடந்திருக்கலாம் என பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளிக்கும்போதே சுகாஷ் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

போர்க் குற்றங்கள் மாத்திரமல்ல, அதையும் தாண்டிய இனப்படுகொலை

இலங்கையில் இடம்பெற்றது போர்க் குற்றங்கள் மாத்திரமல்ல, அதையும் தாண்டிய இனப்படுகொலை. சிங்களப் பேரினவாத அரசானது, இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழினத்தை திட்டமிட்ட வகையில் அழித்துக் கொண்டு வருகின்றது. அதனைத்தான் நாங்கள் இன அழிப்பு அல்லது இனப்படுகொலை எனக் கூறுகின்றோம்.

போர்க்குற்றம் இடம்பெறவில்லை : பிரதி அமைச்சர் அருண ஜயசேரகவிற்கு வலுக்கும் எதிர்ப்பு | Strong Opposition Deputy Minister Aruna Jayasekara

 பிரதி அமைச்சர் உண்மையை அறியாதவராக கதைக்கவில்லை. நடந்தது என்ன என்று அவருக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் நடந்த இனப்படுகொலையினுடைய பங்காளிகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் மாத்திரம் கிடையாது. பிரதி அமைச்சர் சார்ந்த ஜனதா விமுக்தி பெரமுனவும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

யுத்தக் குற்றத்தின் அடையாளமே செம்மணிப் புதைகுழி : அருண ஜயசேகரவிடம் விசாரணையை வலியுறுத்தும் சுரேஷ்

யுத்தக் குற்றத்தின் அடையாளமே செம்மணிப் புதைகுழி : அருண ஜயசேகரவிடம் விசாரணையை வலியுறுத்தும் சுரேஷ்

ஜேவிபிக்கும் இனப்படுகொலைக்கு பொறுப்பு கூற வேண்டிய கடப்பாடு 

ஏனென்றால் யுத்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அனைத்துக்கும் மாறி மாறி முண்டு கொடுத்தவர்கள் இந்த ஜேவிபியினர்.

போர்க்குற்றம் இடம்பெறவில்லை : பிரதி அமைச்சர் அருண ஜயசேரகவிற்கு வலுக்கும் எதிர்ப்பு | Strong Opposition Deputy Minister Aruna Jayasekara

 சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த பொழுதும் அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோதும் அவர்களுடைய ஆட்சியை பலப்படுத்துவதற்கான ஆதரவை ஜேவிபி வழங்கி இருந்தது. இவர்களும் ஆட்சியாளர்களுடைய பங்காளிகளாக இருந்து இனப்படுகொலைக்காக பங்காற்றியவர்கள் தான். இனப்படுகொலைக்கு பொறுப்பு கூற வேண்டிய கடப்பாடு ஜேவிபிக்கும் இருக்கிறது.

 ஆகவே பிரதி அமைச்சருடைய கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். இலங்கையில் நடைபெற்றது போர் குற்றத்தையும் தாண்டிய இனப்படுகொலை. இதற்கு முற்றுமுழுதான சர்வதேச விசாரணை தான் தீர்வாக அமைய முடியும் - என்றார்.

இலங்கையில் போர்க்குற்றங்கள் நடக்கவில்லை : அரசின் கருத்துக்கு செல்வம் எம்.பி கண்டனம்

இலங்கையில் போர்க்குற்றங்கள் நடக்கவில்லை : அரசின் கருத்துக்கு செல்வம் எம்.பி கண்டனம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026