லெபனானில் இருந்து வெளியேறவுள்ள இஸ்ரேலிய இராணுவம்!
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட கட்டமைப்பு ஒப்பந்தத்தின் கீழ், தெற்கு லெபனானில் இருந்து தனது படையை வெளியேற்றும் முன்னோட்டக் கட்டத்தை தொடங்க இஸ்ரேலிய இராணுவம் தயாராகி வருவதாக இஸ்ரேலிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு முன்னோட்ட மண்டலங்களில் ஒன்றிலிருந்து படைகள் திரும்பப் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ படைகள் திரும்பப் பெறப்படும் இடங்கள் அல்லது கால அட்டவணை குறித்து எந்த அதிகாரப்பூர்வ விவரங்களும் வெளியிடப்படவில்லை என்று அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.
திறக்கப்படும் வழித்தடம்
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே நேரடித் தொடர்பு வழித்தடம் ஒன்றும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை அன்று, லெபனானும் இஸ்ரேலும் அமெரிக்காவின் ஆதரவுடன் ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தம், இரண்டு முன்னோட்டப் பகுதிகளில் தொடங்கி, லெபனான் நிலப்பரப்பிலிருந்து இஸ்ரேல் படிப்படியாக வெளியேறுவதை வலியுறுத்துகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்