தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை விவகாரம்: அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள விசேட நடவடிக்கை
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை நிர்வகிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுத் தனியாக ஆராயப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியழித்துள்ளார்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் அங்குள்ள வைத்தியசாலை நிர்வாகத்தினர் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர்களுடன் கலந்துரையாடினார்.
அதன் பின்னர் கருத்து தெரிவித்த போது சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.
வைத்தியசாலைக்கு மூன்று மாடி கட்டிடம்
எதிர்வரும் காலத்தில் வைத்தியசாலையில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தை முழுமையாக கட்டி தருவதாகவும் இதன் போது அமைச்சர் வாக்குறுதியளித்தார்.

இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, சுகாதார அமைச்சின் செயலாளர் அணில் ஜெயசிங்க உள்ளிட்ட சுகாதார துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்