குளவி கொட்டுக்கு இலக்காகி 73 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
Sri Lanka Police
Sri Lankan Schools
By Laksi
பசறை தேசிய பாடசாலை ஒன்றில் குளவி கொட்டியதில் பாதிக்கப்பட்ட 73 பாடசாலை மாணவர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பசறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று (20) இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு ஒத்திகையின் போதே குளவி கொட்டியதில் 73 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் பாதிப்பு
மேலும், இந்த மாணவர்களில் 18 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எஞ்சிய மாணவர்கள் வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் பசறை காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் பியரத்ன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இந்நிலையில், பசறை தேசிய பாடசாலையின் வருடாந்த இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி