யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணை ஏமாற்றிய கில்லாடி : பறிபோனது பணம்
யாழ்ப்பாணம்,வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் தனியாக வசித்து வரும் வயோதிபப் பெண் ஒருவரின் 50 ஆயிரம் ரூபா பணம்கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மோட்டார் சைக்கிளில் வந்த நூதன திருடன்
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் குறித்த வீட்டுக்கு சென்று, தான் கமநலசேவை திணைக்களத்தில் இருந்து வருவதாக தெரிவித்து,விவசாய அழிவுக்கு நட்ட ஈடாக குறித்த பெண்ணுக்கு 2 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பணத்தை பெறுவதற்கு 50 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் உண்மையறியாத அந்த வயோதிபப் பெண் அவரின் பேச்சை நம்பி 50 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார்.
வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு
தான் ஏமாற்றப்பட்ட விடயம் பின்னர் தெரியவந்த நிலையில் இது குறித்து வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)