கோர விபத்து - 100 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி: நால்வர் படுகாயம்
அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து லிந்துலை, மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் பின் இருக்கையில் பயணித்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
காயமடைந்தவர்களில் ஒருவர் முதுகுத் தண்டுவடத்தில் காயம் அடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கர வண்டி சாரதி மற்றும் பின்னால் பயணித்த அவரது நண்பர்கள் அதிக அளவில் மதுபோதையில் இருந்ததாகவும், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
