கொழும்பில் அமைக்கப்படவுள்ள மும்மொழிப் பாடசாலை : பிரதமர் அறிவிப்பு

Colombo Harini Amarasuriya Education Tamil
By Sathangani Nov 24, 2026 03:53 AM GMT
Report

கொழும்பு மாவட்டத்தில் மும்மொழிப் பாடசாலை ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தமிழ் மொழிமூலக் கல்வி வசதிகளுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்டக் கல்வி உபகுழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பரபரப்பு : வெளிநாட்டில் மனைவிக்கு சித்திரவதை : குழந்தைகளுடன் வாவியில் குதிக்க முயன்ற தந்தை

மட்டக்களப்பில் பரபரப்பு : வெளிநாட்டில் மனைவிக்கு சித்திரவதை : குழந்தைகளுடன் வாவியில் குதிக்க முயன்ற தந்தை

மாற்றுத்திறனாளி மாணவர்கள்

அங்கு பிரதமர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பின் சில பகுதிகளில் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளின் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் பாடசாலை வருகை குறைவடைதல் மற்றும் இடைவிலகல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

இதற்குத் தீர்வாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தமிழ் மொழிமூல வகுப்புகளை ஆரம்பிப்பதுடன், எதிர்காலத்தில் மும்மொழிப் பாடசாலை ஒன்றை நிறுவவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அமைக்கப்படவுள்ள மும்மொழிப் பாடசாலை : பிரதமர் அறிவிப்பு | A Trilingual School To Be Established In Colombo

ஒவ்வொரு பிள்ளைக்கும் தனது தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக 2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பாடசாலைகள் ஒன்றிணைக்கப்படும்போது, மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது அவசியமாகும் ”எனவும் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு

 நடமாடும் சேவைகள் 

மேலும் இந்தக் கூட்டத்தின் போது பாடசாலை போஷாக்குத் திட்டத்தினால் சில பகுதிகளில் மாணவர்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்புச் சான்றிதழ் இன்றி பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து நடமாடும் சேவைகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

கொழும்பில் அமைக்கப்படவுள்ள மும்மொழிப் பாடசாலை : பிரதமர் அறிவிப்பு | A Trilingual School To Be Established In Colombo

மேல் மாகாணத்தில் பாடசாலை அதிபர்களின் இடமாற்றங்களை நிர்வகிப்பதற்கான புதிய கொள்கைக்கு பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது, இதன்மூலம் 2027ஆம் ஆண்டு முதல் முறையான இடமாற்றச் செயன்முறையை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்தல், முன்பள்ளி ஆசிரியர்களுக்குச் செயன்முறைப் பயிற்சிகளை வழங்குதல் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்களில் மாணவர்களை மையமாகக் கொண்ட கற்பித்தல் முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் உள்ளிட்ட விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தில் பல பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர் தின நினைவேந்தலுக்கு ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி மறுப்பு

மாவீரர் தின நினைவேந்தலுக்கு ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி மறுப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, முரசுமோட்டை

20 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026