உலகையே ஆச்சரியப்படுத்தும் வகையில் பிரிட்டனில் பறிந்த குழந்தை
இறந்த ஒரு தாயிடமிருந்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கருப்பையில் இருந்து பிரிட்டனின் முதல் குழந்தை பிறந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆண் குழந்தை, ஹ்யூகோ பவல், கடந்த டிசம்பரில் லண்டனில் உள்ள குயின் சார்லோட் மற்றும் செல்சியா மருத்துவமனையில் சிசேரியன் மூலம் பிறந்தது.
உயிரிழந்த பெண்ணிடமிருந்து பெறப்பட்ட கருப்பை
பிறக்கும் போது குழந்தையின் எடை 3.1 கிலோகிராம் என பதிவு செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த குழந்தையின் தாயான 30 வயதான கிரேஸ் பெல், கருப்பை இல்லாத நிலையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
ஒரு டீனேஜராக இருந்தபோது தான் ஒருபோதும் தாயாக முடியாது என்று அறிந்திருந்ததாகவும், அன்று மருத்துவமனையில் அழுததாகவும் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ளார்.
இந்தப் பிரசவத்திற்கான கருப்பை இறந்த ஒரு இளம் பெண்ணால் வழங்கப்பட்டது. அவரது கருப்பைக்கு கூடுதலாக, அவர் நான்கு பேருக்கு ஐந்து உறுப்புகளை பொருத்தி, அவர்களின் உயிரைக் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |