ரஷ்ய தலைநகரில் தற்கொலைத்தாக்குதல் காவல்துறை அதிகாரி உட்பட இருவர் பலி
Russo-Ukrainian War
Bomb Blast
Russia
By Sumithiran
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில் தாக்குதலை நடத்தியவர் மற்றும் காவல்துறை அதிகாரி உட்பட இருவர் உயிரிழந்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் சவ்யோலேவ்ஸ்கி தொடருந்து நிலையம் அருகே நள்ளிரவு காவல்துறை ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை
அப்போது அடையாளம் தெரியாத நபர் போக்குவரத்து காவல்துறையினர் வாகனம் அருகே சென்று வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்தச் சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்திய நபரும் இதில் உயிரிழந்தார். இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |