உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சுரேஷ் சாலேவின் இரகசிய சந்திப்பு

Sri Lanka Easter Attack Sri Lanka Arrest
By Dharu Feb 25, 2026 01:07 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் இன்று கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் தொடர்பு குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதற்கான ஆதாரங்கள் முன்னதாக சர்வதேச ஊடகம் ஒன்றின் மூலம் அறிக்கையொன்றின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டன.

ஈஸ்டர் தாக்குதல்களை விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இரண்டு குழுக்கள், நியமிக்கப்பட்டன. அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தொடர்புடைய தாக்குதல்களில் குற்றவாளிகள் என்பதை உறுதியாக வெளிப்படுத்தின.

கோட்டாபய முதல் பிள்ளையான் வரை அதிரும் சுரேஸ் சாலேயின் கைது!

கோட்டாபய முதல் பிள்ளையான் வரை அதிரும் சுரேஸ் சாலேயின் கைது!

இரகசிய சந்திப்பு

இந்த விசாரணைகள் மூலம் மேலும் தெரியவந்துள்ளபடி, சுரேஷ் சாலேவும் பிள்ளையானின் முன்னாள் ஊடகச் செயலாளர் அசாத் மௌலானாவும் புத்தளத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் இரகசியமாக சந்தித்து, சஹாரா ஹாஷிம் உள்ளிட்ட பயங்கரவாதக் குழுவிற்கு தாக்குதலைத் தொடங்க தேவையான பின்னணி மற்றும் வசதிகளை வழங்கினர் என தெரிவிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சுரேஷ் சாலேவின் இரகசிய சந்திப்பு | Suresh Sallay Secret Meeting Before Easter Attacks

அதற்கு மேலாக, தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட ஜமீலுடன் சலேவுக்கு நீண்டகால தொடர்பு இருந்ததை தொலைபேசி பதிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் தென்னிந்தியாவின் ராமேஸ்வரம் கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு பகுதியிலிருந்து, தாக்குதலுக்கு முன்னர் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இருந்து வெளியேறிய ஜமீலுக்கு சுரேஷ் சாலேவும் தொலைபேசி அழைப்பு விடுத்ததை சட்டமா அதிபர் துறையின் மூத்த அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர், இத்தகைய தீவிரமான தகவல்களைக் கொண்ட இந்த இரண்டு முக்கியமான குழு அறிக்கைகளையும் யாரும் அணுக முடியாதபடி முற்றிலுமாக அழிக்குமாறு அப்போதைய ஜனாதிபதி ரணில் மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக தெரியவந்துள்ளது.

இந்த அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து இல்லாது செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கொழும்பு மால் வீதியில் உள்ள சாகல ரத்நாயக்கவின் வீட்டில் சுரேஷ் சாலே மற்றும் நிலந்த ஜெயவர்தனவுடன் சுமார் நான்கு மணி நேரம் இரகசிய சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதன் போது ரணில் விகிரமசிங்கவும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இவ்வாறு காணாமல் போன அறிக்கைகளில் சனல் 4 வெளிப்பாடுகளை விசாரித்த குழு அறிக்கை மற்றும் துல்லியமான உளவுத்துறை கிடைத்த போதிலும் நடவடிக்கை எடுக்கத் தவறியது குறித்து விசாரித்த முன்னாள் நீதிபதி அல்விஸ் குழு அறிக்கை ஆகியவை அடங்கும்.

சுரேஷ் சலே கைது குறித்து உதய கம்மன்பில குற்றச்சாட்டு

சுரேஷ் சலே கைது குறித்து உதய கம்மன்பில குற்றச்சாட்டு

அநுர குமார திசாநாயக்க

தற்போது ​​கத்தோலிக்க திருச்சபை, முன்னாள் குற்றப் புலனாய்வு இயக்குநர் ஷானி அபேசேகர, அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் பல சிவில் கட்சிகள் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இந்த அறிக்கைகளை விரைவில் பகிரங்கப்படுத்துமாறு கடுமையாக வலியுறுத்தி வருகின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சுரேஷ் சாலேவின் இரகசிய சந்திப்பு | Suresh Sallay Secret Meeting Before Easter Attacks

இது தொடர்பான செய்தி கடந்த ஆண்டு 2024-09-30 அன்று தென்னிலங்கையின் பிரதான ஊடகமொன்றில் வெளியிடப்பட்டது.

இதற்கிடையில், கொழும்பு உணவகம் ஒன்றில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இரகசிய ஆவணத்தில், புலனாய்வு சேவையின் மறைக்கப்பட்ட செயல்பாடுகள் குறித்து மேலும் சர்ச்சைக்குரிய விவரங்களை வெளிப்படுத்தியுள்ளன.

சுரேஷ் சாலேவின் தலைமையின் போது உளவுத்துறை சேவையிலிருந்து இரகசியமாக சம்பளம் பெற்ற 85 பேரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மேலும் அவர்களில் பிரபல பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், யூடியூபர்கள், தொழிலதிபர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் அடங்குவர் என்பது தெரியவந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தங்களையும் உளவுத்துறை வலையமைப்பையும் பாதுகாக்கவும், சமூக சித்தாந்தத்தை மாற்றவும் இந்த வழியில் பணம் பெற்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த சூழ்நிலை உளவுத்துறை சேவைகளின் ஈடுபாடு குறித்து வலுவான சமூக விவாதத்தை உருவாக்கியுள்ளது. ஈஸ்டர் தாக்குதல்களின் மூளையாகக் கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமுக்கும் சுரேஷ் சாலேவுக்கும் இடையிலான உறவு கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்திலிருந்தே இருந்து வருவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சாலே காத்தான்குடி பகுதியில் சஹ்ரானை சந்தித்து தௌஹீத் ஜமாத் அமைப்பை உருவாக்க ஆலோசனை மற்றும் நிதி உதவிகளை வழங்கியதாகவும், பின்னர் மலேசியாவில் சஹ்ரானுடன் இணைந்து மிக முக்கியமான கலந்துரையாடல்களை நடத்தினார் என்றும் கூறப்படுகிறது.

அவந்த் கார்ட் நிறுவனத்தின் இரண்டு ரிட் மனுக்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

அவந்த் கார்ட் நிறுவனத்தின் இரண்டு ரிட் மனுக்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

ஈஸ்டர் தாக்குதல்

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் எழுச்சியுடன், இராணுவப் பயிற்சிக்காக இந்தியா சென்ற சாலேவை நாட்டுக்கு விரைவாக அழைத்து, அவரை தேசிய புலனாய்வு இயக்குநராக நியமிக்க அப்போதைய ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சுரேஷ் சாலேவின் இரகசிய சந்திப்பு | Suresh Sallay Secret Meeting Before Easter Attacks

இந்த மிகவும் சிக்கலான பின்னணியில், ஈஸ்டர் தாக்குதல்களுக்கும் புலனாய்வு அதிகாரிகளுக்கும் இடையிலான உறவு குறித்த புலனாய்வுத் தகவல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்த இளம் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜெயவர்தனவை குறிவைத்து ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மனித வேட்டை நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன.

குற்றப் புலனாய்வுத் துறையின் கொலைப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி இந்துக சில்வா மூலம் நீதித்துறையை தவறாக வழிநடத்தி இந்த பத்திரிகையாளரைக் கைது செய்ய சதி முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக தரிந்து ஜெயவர்தன பதில் காவல்துறைமா அதிபரிடம் அதிகாரப்பூர்வமாக முறைப்பாடு அளித்துள்ளார்.

அதன்படி சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி முன்னர் பாரபட்சமாக செயல்பட்டதாகக் குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026