எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு
3,900 மெட்ரிக் தொன் திரவ பெற்றோலிய எரிவாயுவை (LPG) ஏற்றிவந்த கப்பலில் இருந்து தற்போது கொழும்பு துறைமுகத்தில் எரிவாயு இறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதால், எரிவாயு தட்டுப்பாடு குறித்து மக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டியதில்லை என நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (13.10.2026) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மாலைதீவிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலில் இருந்து தற்போது எரிவாயு இறக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் எரிவாயு விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நளிந்த ஜயதிஸ்ஸ
எனவே, மக்கள் எரிவாயுவை வழக்கத்தைவிட அதிகளவில் கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், வழமைபோன்று செயற்படுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |