செம்மணிக்கு நீதி கோரி விநோத உடை! சிறுவனின் பெற்றோருக்கு விசாரணை...
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Independent Writer
செம்மணியில் இடம்பெற்ற அவலத்தை சித்தரித்து வினோத உடைப் போட்டியில் அதனைப் பிரதிபலித்த மாணவனின் பெற்றோரை மருதங்கேணிப் காவல்துறையினர் இன்று விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
யாழ்.வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது விநோத உடை போட்டியில் பங்குகொண்ட ஓர் சிறுவனே செம்மணியில் புதையுண்ட சிறுவர்களாக காட்சியளித்தான்.
இந்நிலையில் இவ்வாறு வேடமணிந்த சிறுவனின் பெற்றோரே இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


[SKPKSKO ]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்