யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வாகனம் அதிகாலையில் விபத்து : 7 பேர் காயம்
                                    
                    Colombo
                
                                                
                    Kandy
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                        
        
            
                
                By Sathangani
            
            
                
                
            
        
    யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்து பேராதனை (Peradeniya) மற்றும் கண்டி (Kandy) வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரிமத்தலாவ நகருக்கு அருகில் உள்ள பகுதியில் இன்று (21) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டியில் இருந்து கொழும்பு (Colombo) நோக்கி பயணித்த இந்த வான் உயர் மின்னழுத்த கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
புனித யாத்திரை சென்று திரும்பிய ஆரவளை பிரதேசவாசிகள் குழுவே இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகன்னாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்