ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது
                                    
                    Nuwara Eliya
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                                                
                    Fire
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    கினிகத்தேன தியகல பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் தீயினால் நுவரெலியா(Nuwara Eliya) நோக்கிச் சென்ற கார் ஒன்று இன்று (20) காலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக கினிகத்தேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
காலை 11 மணியளவில் கினிகத்தேன தியகல பிரதேசத்தில் ஐந்து பேர் பயணித்த நிலையில் ஓடிக் கொண்டிருந்த கார் (20) தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.
கார் முற்றாக எரிந்து நாசமானது
காவல்துறையினர் தீயை கட்டுப்படுத்த கடுமையாக முயற்சித்த போதிலும், தீ பரவி கார் முற்றாக எரிந்து நாசமானது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்