மைக்ரோசொஃப்ட் மென்பொருள் செயலிழப்பு: ஒலிம்பிக் போட்டிகளில் செலுத்தியுள்ள தாக்கம்
உலகளாவிய ரீதியில் மைக்ரோசொஃப்ட்(Microsoft) மென்பொருள் முடங்கியதையடுத்து பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டிகள்(Olympic Games Paris 2024) நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மைக்ரோசொஃப்ட் மென்பொருள் நிறுவனம் நேற்றையதினம் முடங்கியமை தொடர்ந்து ஊடக நிறுவனங்கள், விமான சேவைகள், வங்கிகள், மருத்துவமனைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்னும் சில நாட்களில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடங்கியதால், திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள்
ஏனெனில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள், மைரோசாஃப்ட் மென்பொருள் முடங்கியதால், தங்கள் தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகளில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
மேலும், ஒலிம்பிக் போட்டிகளுக்காக பாரீஸ் வரும் சிலர், அதாவது, விளையாட்டு வீரர்களுடன் வருவோர் போன்றவர்கள், தங்கள் badgeகளை ஒலிம்பிக் போட்டிகள் துவங்குவதற்கு முன் பெறுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் திட்டமிடல் குழுவின் தலைவரான டோனி எஸ்டான்ட்குட் (Tony Estanguet ), ஒலிம்பிக் தீபம் ஏந்திச் செல்லும் ஓட்டம் திட்டமிட்டபடி தொடரும் என்றும், முக்கிய தகவல்களை அணுகுவதில் பாதுகாப்பு தொடர்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய விளையாட்டு வீரர்களை வரவேற்பதிலும், விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுடன் வருவோரை வரவேற்பதிலும், சீருடைகள் மற்றும் அங்கீகாரம் வழங்குவதிலும் உருவாகியுள்ள பிரச்சினைகளால் தங்கள் செயல்முறைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதை தற்போது சமாளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |