யாழில் உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை: காலாவதியான உணவு விற்பனை
யாழ்ப்பாணம் (Jaffna) - ஏழாலை பகுதியில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்த உணவகம் ஒன்றிற்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிமன்றம், உரிமையாளரை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளது.
குறித்த வழக்கானது மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று (7.6.2024) இடம்பெற்றுள்ளது
உணவக உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஏழாலை சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தரமற்ற உணவு
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மன்றில் முன்னிலையான உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து உரிமையாளரை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.
அதேவேளை கடந்த வாரம் சுன்னாகம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் காலாவதியான மற்றும் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படுத்த கூடிய உண்பதற்கு தகாத உணவு பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக வியாபார நிலைய உரிமையாளருக்கு 83 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |