பிரித்தானியாவில் வாட்ஸ் அப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
பிரித்தானியாவில்(United kingdom) வாட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி,வாட்ஸ் அப்பில் இடம்பெரும் மோசடி தொடர்பிலேயே இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பிரித்தானியாவிலுள்ள கோவென்ட்ரி (Coventry) என்னும் நகரில் வாழும் கேசி ரீட் (Kasi Reid) என்னும் பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு அழைப்பு வந்துள்ளது.
போலி அழைப்பு
தனது மகனுடைய பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களின் வாட்ஸ் அப் குழுவிலிருந்து தான் அழைப்பதாக அழைத்த நபர் தெரிவித்துள்ளார்.
அதன்போது, தான் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், தான் அனுப்பியுள்ள code ஒன்றை கிளிக் செய்து பார்ட்டியில் பங்கேற்போருடன் இணைந்துகொள்ளுமாறும் அந்த நபர் கேட்டுள்ளார்.
அந்த நபர் கேட்டுக்கொண்டபடி, குறித்த பெண் அந்த codeஐ கிளிக் செய்திருப்பாரானால், அந்த நபர் கேசியின் வாட்ஸ் அப் கணக்கை தனது கட்டுப்பாட்டில் எடுத்திருப்பார்.
இந்நிலையில், இப்படியான மோசடி நிலவுவதாகவும், பிரித்தானியர்கள் தங்களுக்கு இப்படிப்பட்ட அழைப்பு தொடர்பில் கவனமாக இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
நிபுணரின் எச்சரிக்கை
இது தொடர்பில், விளக்கமளித்த துறைசார் நிபுணர் ஹேலி ஹாசல்(Hayley Hassall),“முதலில், உங்களுக்கு வரும் அழைப்பு எந்த நாட்டிலிருந்து வருகிறது என்பதை கவனியுங்கள் என்கிறார்.
இதேவேளை, உங்களுக்கு செய்தி அனுப்பும் நபர், உங்கள் contact பட்டியலில் உள்ளவரா, அல்லது நீங்கள் பங்குபெற்றுள்ள குழுவில் உள்ளவரா என்பதை வாட்ஸ் அப்பே சுட்டிக்காட்டிவிடும்.
அத்துடன், உங்கள் contact பட்டியலில் உள்ளவர்களிடமிருந்து மட்டும் செய்திகள் வரும் வகையில் நீங்கள் உங்கள் வாட்ஸ் அப் கணக்கைக் கட்டுப்படுத்தவும் முடியும்.
வாட்ஸ் அப்பில் செய்திகள் வந்தால், உடனடியாக பதிலளிக்காதீர்கள், பொறுமையாக சிந்தித்து அதன் பின் செயல்படுங்கள்.
உங்கள் நண்பரிடமிருந்து வந்த செய்தியாகத் தோன்றினால் கூட, அவரை அழைத்து இந்த செய்தியை அனுப்பியது அவர்தானா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்” என அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்.. |