தேங்காய் பறிக்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
Sri Lanka Police Investigation
Climate Change
Weather
By Sumithiran
ஹொரணை, மிவனபலன பிரதேசத்தில் மோசமான வானிலை காரணமாக அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி பெண் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.
மின்கம்பி அறுந்து விழுந்திருக்கலாம்
பலத்த காற்று வீசியதால் மின்கம்பி மீது மரம் விழுந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
குறித்த பெண்ணுக்குச் சொந்தமான காணியில் தேங்காய் பறிக்கச் சென்ற போதே இந்த துரதிஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சடலம் ஹொரண மாவட்ட வைத்தியசாலைக்கு
சம்பவம் இடம்பெற்ற இடத்தை ஹொரணை பதில் நீதவான் சட்டத்தரணி காந்தி கன்னங்கர பார்வையிட்டதன் பின்னர் சடலம் சட்ட வைத்திய பணிகளுக்காக ஹொரண மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்