குடும்ப தகராறு! மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
Sri Lanka
Crime
Death
By Shalini Balachandran
வெலிமடை டயரபாவத்தை, மேல் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் 36 வயதான டயரபாவத்தை மேல் பிரதேசத்தை சேர்ந்த பெண்னொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் பெண்ணின் கணவரே கொலையை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாக்குவாதம்
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கணவன் மனைவியை கொடூரமாக தாக்கி பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் விசாரைணையில் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் 35 வயதுடைய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் வெலிமடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவில் அதிகரிக்கும் திருட்டுச் சம்பவங்கள் : பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறையினர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்