கர்ப்பப்பை குழாய் வெடித்து பெண்ணொருவர் மரணம் - புலோலியில் சம்பவம்
Jaffna
Sri Lankan Peoples
Death
By Nithusan
யாழ்ப்பாணம் புலோலியில் கர்ப்பப்பை குழாய் வெடித்து பெண்ணொருவர் நேற்றைய தினம்(16) உயிரிழந்துள்ளார்.
புலோலியைச் சேர்ந்த 30 வயதுடைய அனுசன் துளசி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் மன்னார் சென் சேவியர் பெண்கள் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார்.
நடந்த சம்பவம்

திடீர் வயிற்று வலியினால் துடிதுடித்த அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனையின் போது , கர்ப்பப்பை குழாயினுள் கரு தங்கியமையின் காரணமாக கர்ப்பப்பை குழாய் வெடித்தே மரணம் சம்பவித்ததாக வைத்தியர்களால் அறிக்கையிடப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி