யாழில் விபத்து: இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!
Sri Lanka Police
Jaffna Teaching Hospital
By Kiruththikan
நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்து
யாழில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கொட்டடி நாவாந்துறை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 31 வயதுடைய நவரட்ணராஜா சங்கீத் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் அடையாளம் காட்டியுள்ளனர்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
மேலும் இவருடன் பயணித்தவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி