வடக்கு - கிழக்கில் பக்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்

Sri Lankan Tamils Jaffna Sri Lanka
By Independent Writer Aug 12, 2026 10:44 AM GMT
Report

அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் 

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று (12) புதன்கிழமை மதியம் 12 மணிக்கு ஆலயத் தீர்த்தக் கேணியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 03 ஆம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இப்பெருவிழாவின் 10 ஆம் நாளான இன்று, ஆடி அமாவாசை தினத்தில் தீர்த்தோற்சவம் இனிதே இடம்பெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிஷேக, பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, வசந்த மண்டபப் பூஜை நடைபெற்று, சுவாமி வெளிவீதி உலா வந்து வேத பாராயணங்கள் முழங்க, பக்தர்களின் 'அரோகரா' கோஷத்திற்கு மத்தியில் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

வடக்கு - கிழக்கில் பக்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் | Aadi Amavasya Theerthotsavam The North And East

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதத் தீர்த்தத்தில் நீராடி இறைவழிபாடு செய்தனர்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று, ஸ்ரீ இராம பிரானால் வழிபடப்பட்டதாக வரலாற்றுத் தொன்மையும் புகழும் மிக்க இப் புண்ணிய தலத்தில், ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்கள் பிதுர்கடன் செலுத்தி ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும் இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும்.

செய்தி - பவன்  

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயம்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (12) காலை ஆடி அமாவாசை விசேட பூஜை வழிபாடுகள் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

வடக்கு - கிழக்கில் பக்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் | Aadi Amavasya Theerthotsavam The North And East

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று புதன்கிழமை காலை வசந்த மண்டபத்தில் கௌரியுடை திருக்கேதீஸ்வர நாதருக்கு விசேட வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து சுவாமி உள் வீதி எழுந்தருளி பாலவி தீர்த்தக்கரைக்கு தீர்த்தமாட சென்றார்.

பாலாவி தீர்த்தம் இடம் பெற்றதை தொடர்ந்து சுவாமி வெளிவீதி உலா வந்தார். அதனை தொடர்ந்து பாலாவி தீர்த்த கரையில் இறந்த முன்னோரை நினைவு கூர்ந்து எள்ளும்,தண்ணீரும் தர்ப்பணம் செய்யப்பட்டது. 

செய்தி - Nayan

வெருகல் -ஸ்ரீ சித்திரவேதாயுதர் சுவாமி

தமது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்யும் ஆடி அமாவாசை தீர்த்தமானது திருகோணமலை, வெருகல் -ஸ்ரீ சித்திரவேதாயுதர் சுவாமி தேவஸ்தானத்தில் இன்று புதன்கிழமை (12) காலை இடம்பெற்றது.

வடக்கு - கிழக்கில் பக்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் | Aadi Amavasya Theerthotsavam The North And East

இதில் ஆயிரக்கணக்கான சைவ பக்த அடியார்கள் கலந்து கொண்டு வெருகல் -மஹாவலி கங்கை புனித நீரில் தீர்த்தமாடி தமது நேர்ச்சைகளை நிறைவேற்றினர்.

பூஜை வழிபாடுகளை இந்து குருமார் சங்க அமைப்பின் தலைவர் வைத்தீஸ்வரர் சர்மா குருக்கள் நிகழ்த்தினார். இதன்போது முதலில் பூஜை வழிபாடுகள் பின்னர் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்று சாமி வெளி வீதி உலாவந்தது.

பின்னர் சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்று இறுதியாக தீர்த்தக் கரைக்குச் சென்று தீர்த்தம் இடம்பெற்றது. இந்து மக்கள் ஆடி அமாவசை நாளில் , புனித நீரில் நீராடி முன்னோர்களின் ஆன்மா அமைதிக்காகவும் ,குடும்ப நலனுக்காகவும் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

செய்தி - Buharys Mohamed

கீரிமலை

ஆடி அமாவாசை பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள் கீரிமலை கண்டகி தீர்த்த கரையில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.

வடக்கு - கிழக்கில் பக்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் | Aadi Amavasya Theerthotsavam The North And East

தந்தையை இழந்தவர்கள் பிதிர்க்கடன் செலுத்தும் விரதாமான ஆடி அமாவாசை விரதத்தினை முன்னிட்டு, தமது பிதிர்க்கடன்களை செலுத்தி கடலில் நீராடினார்கள்.

அதேவேளை மாவிட்டபுர கந்தனின் தீர்த்தோற்சவமும் கண்டகி தீர்த்த கரையில் இடம்பெற்றது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026