ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…

Tamils Sri Lanka Festival
By Theepachelvan Jul 17, 2026 05:44 AM GMT
Report
Courtesy: தீபச்செல்வன்

பண்பாட்டை மறந்த இனம் பூமியில் நிலைப்பதில்லை என்பார்கள். தனி மனிதன் வாழ்வியல் நெறிகளை அறியவும் தன்னை சமூகத்தில் இணைத்துக் கொள்ளவும் பண்பாடு வழி வகுக்கிறது.

உலகம் மிக நவீனத்துமடைந்து வருகின்ற காலத்தில் தொடர்பாடல் பன்முக வளர்ச்சியைப் பெற்று வருகின்ற காலத்தில் பண்பாடுதான் தனி மனிதனை சமூகமயமாக்கும் சாதனமாகவும் விளங்குகிறது.

ஈழத் தமிழர்களின் பண்பாடு சைவத்தோடும் தமிழோடும் இயற்கைநெறியோடும் கலந்தது. அத்தகைய பண்டிகைகளில் ஒன்றாக விளங்கும் ஆடிப்பிறப்பு இன்றாகும். 

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தரவுக்கு திடீர் இடமாற்றம்!

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தரவுக்கு திடீர் இடமாற்றம்!

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தெள்ளி, வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து, தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பhளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை… | Aadi Pirappu Is Cultural Festival Of Eelam Tamils

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டு மாவுண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே குத்து விளக்குக் கொளுத்தி வைத்து அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே 

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே  

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தந் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

எனத் துவங்கும் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் பாடல் தமிழ் ஈழச் சமூகத்தில் இரண்டக் கலந்த வாழ்வியல் பாடலாகும்.

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர்

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர்

ஈழத்தில் ஆடிப்பிறப்பு

ஆடிப்பிறப்பு நாளில் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள்தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள்.

இம்முறையும் ஆடிப்பிறப்பை ஒட்டி ஈழத்தில் பல வீடுகளில் கூழ்காய்ச்சி, கொழுக்கட்டை அவித்து கொண்டாடினாலும் இதையெல்லாம் கொண்டாட முடியாத நிலையிலும் பல வீடுகள் வெளித்துக் கிடக்கும் காட்சிகளை கடந்த பதினைந்து ஆண்டுகளாக பார்த்து வருகின்றோம்.

ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை… | Aadi Pirappu Is Cultural Festival Of Eelam Tamils

சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை தொடக்கம் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலம் எனப்படும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும்.

பின்னர், சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலம். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும்.

தட்சணாயணத்தின் ஆரம்ப தினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது. வானியல், அறிவியல் பின்புலத்தை கொண்ட இந்தப் பண்டிகை இயற்கைசார்ந்த வழிபாடாகவும் பரிமாணம் பெறுகிறது.

2025 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

2025 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஆடிப்பிறப்பு

தமிழகத்தில், இந் நாளில் விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தலும் உற்றார், உறவினர்களுக்கு இவ் உணவு வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணலும் வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆடி மாதத்தில் ஆற்றுநீர் வளமுள்ள தென்னாட்டு மக்கள் காவிரி போன்ற ஆற்றங்கரைகளில் சித்திரான்னம் உண்டு படகோட்டம் போன்ற கேளிக்கைகளில் பங்குபற்றும் இந்த நாளை 'ஆடிப்பெருக்கு' என்றும் அழைத்து பண்டிகையாகக் கொண்டாடுவர்கள். தற்காலத்திலும் தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையில் ஆடிப்பெருக்கு கொண்டாடும் வழக்கம் இருந்து வருகிறது.

ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை… | Aadi Pirappu Is Cultural Festival Of Eelam Tamils

“ஆடி விதை தேடி விதை ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் ஆடி ஆவணி ஆன புரட்டாதி காடி தோய்த்த கனபனங் காயத்தைத் தேடித் தேடித் தினமும் புசிப்பவர் ஓடி யோடி யுலகெலாம் பீச்சுவர்” இப்படி தமிழக பழைய பாடல்களில் எழுதப்பட்டுள்ளமை தமிழகத்தில் ஆடிப்பிறப்பிற்குள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.

ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை... என்ற பாடல்தான் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஆடிப்பிறப்பு நாளில் நினைவுக்கு வரும். இந்தப் பாடலை ஈழப் புலவர்களில் ஒருவரான நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடியுள்ளார்.

ஆடிப்பிறப்புக்கு ஒரு காலத்தில் விடுமுறைகள் விடுக்கப்பட்டுள்ளன. அந்தளவு முக்கியமான நாளாக ஆடிப்பிறப்பு அமைந்துள்ளது. அதாவது தை முதல் நாளையும் ஆடி முதல் நாளையும் ஈழத்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

ஒரு ஆண்டின் தொடக்கத்தையும் அரை ஆண்டின் தொடக்கத்தையும் கொண்டாடுகின்றனர். இங்கு முதல் அரையாண்டு தேவர்களுக்குரியது என்றும் இறுதி அரையாண்டு பிதிர்களுக்கு உரியது என்றும் ஒரு ஐதீகம் இருக்கிறது.

கற்கடகம் என்பது ஆடி மாத்தின் பழைய தமிழ் பெயராகும். ஆடி முதல் நாளை தமிழர்கள் வரவேற்கும் விழாவே ஆடிப்பிறப்பு. இப் பண்டிகையின் போது தேங்காய் சுடுதல் என்ற உணவுப் பழக்கமும் தமிழர்களிடம் காலம் காலமாக நிலவிவந்துள்ளது.

ஆடிப்பிறப்புக் கொண்டாட்டங்கள்

தேங்காய் நாரை முற்றிலும் உரித்துவிட்டு நன்றாக உருட்டியபின், தேங்காயின் 3முகங்களில் ஒன்றில் மட்டும் துளையிட்டு தேங்காய் நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்து கொள்ளவும்.

சிப்பருப்புடன், பொட்டுக்கடலை, எள்ளு, வெல்லம், சிறிதளவு உப்பிட்டு அரைத்தெடுத்து. தேங்காயின் ஒரு துவாரத்தின் வழியாக அடைத்து சிறிது தேங்காய் நீரை ஊற்றியபின் இதுவாரத்தை மஞ்சளிட்டு அடைத்து வாதனங் குச்சியை துவாரத்தில் சொருகி தேங்காயை தீயில் சுட்டபின் கடவுளுக்கு படைத்தபின் உடைத்து குடும்பத்துடன் சாப்பிடும் வழக்கம் தமிழ்நாட்டில் காணப்பட்டுள்ளது.

ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை… | Aadi Pirappu Is Cultural Festival Of Eelam Tamils

ஆடிப்பிறப்பன்று, வானவேடிக்கைகள், வோர்னில் விழகாக்கள், களியாட்ட நிகழ்வுகள், பட்டம் விடுதல் முதலிய நிகழ்வுகளில் ஈழத்தவர்கள் ஈடுபட்டதாக மூதாதையர்களின் நினைவுக்குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படுகிறது.

சிறுவர்களும் முதியவர்களும் இணைந்து கூடிக் கொண்டாடி மகிழும் ஒரு நிகழ்வாக ஆடிப்பிறப்பு காணப்படுகிறது. அத்தடன் ஈழக் கவிஞர் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடல் ஆடிப்பிறப்பின் கொண்டாட்டம், களியாட்டம், பண்பாட்டு முக்கியத்துவம், கலாசார செழிப்பு என்று பல்வேறு முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துகிறது.

விடுதலையற்ற ஆடிப்பிறப்பு

இப்போது ஆடிப்பிறப்புக்கு விடுமுறை இல்லை. ஆடிப்பிறப்பு என்று மாத்திரம் வெறுமனே எமது நாட்காட்டிகள் நினைவுபடுத்துகின்றன. இப்போது விடுமுறையற்ற ஆடிப்பிறப்பு மாத்திரம் வருவதில்லை. விடுதலையற்ற ஆடிப்பிறப்புத்தான் வருகிறது.

விடுதலை பெறாத இனத்தின் எல்லாப் பண்டிகைகளும் கொண்டாடும் தன்மையை இழக்கின்றன. அத்துடன் கூடியிருந்தவர்களை இழந்து, கூடியிருந்தவர்களுக்காக காத்திருக்கும் துயரச் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ள ஈழத்தில் இந்த ஆடிப்பிறப்பு வேதனையை தோற்றுவிக்கும் நாளாகவும் ஆகிவிட்டதையும் நாம் இங்கு கவனம் கொள்ள வேண்டும்.

ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை… | Aadi Pirappu Is Cultural Festival Of Eelam Tamils

ஆடிப்பிறப்புக்கு விடுமுறை வழங்கப்பட்ட செயற்பாடு ஏன் வழக்கொழிந்தது? இது ஆராயப்பட வேண்டியது. மீண்டும் ஆடிப்பிறப்பு விடுமுறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கடந்த காலத்தில் ஆடிப்பிறப்பின் போது கொண்டாட்ட நிகழ்வுகளை பாடசாலைகளிலும், பொதுவிடங்களிலும் வடமாகாண பண்பாட்டு திணைக்களம் ஏற்பாடு செய்த்தும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனினும் ஆடிப்பிறப்பு போன்ற பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க தினங்களை அரச விடுமுறை தினங்களாக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த வேண்டும். வடகிழக்கில் இந்த நடைமுறையைக் கொண்டுவருவதன் மூலம் காயப்பட்ட ஈழ மக்கள், தமது பாரம்பரிய பண்பாட்டு தினங்களை கொண்டாடி உளத்தை வலுப்படுத்தவும் ஆற்றவும் முடியும்.

பண்டிகை நாட்களில் மனதில் பெரும் மகிழச்சியோடு, உறவுகள் கூடியிருப்பதுதான் மகிழச்சியையும் கொண்டாட்டதையும் புது தொடக்கத்தையும் தருகிறது. பண்பாட்டு அழிப்புக்களுக்கும் கலாசார நெருக்கடிகளுக்குள்ளும் தள்ளப்பட்டுள்ள ஈழத் தமிழ் இனம் ஆடிப்பிறப்பு போன்ற பாரம்பரிய பண்டிகை தினங்களை கொண்டாடி தமது கலாசார, பண்பாட்டு தடத்தை வலுப்படுத்த வேண்டும்.

இனவழிப்புப் பொறிகள் நிறைந்த மண்ணில் இத்தகைய பண்பாட்டு பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் இன்றைய தலைமுறையை வலுப்படுத்துபவை.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 17 July, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026