ஆடிப்பூர நாளில் திருமணம், குழந்தை வரம் கிடைக்க செய்ய வேண்டிய வழிபாடுகள்

Hinduism
By Sathangani Aug 06, 2024 11:13 AM GMT
Report

ஆடிப்பூர நன்நாளில் பக்தர்கள் திருமணம், குழந்தை வரம் மட்டுமின்றி குடும்ப நலனுக்காகவும் வேண்டுதல் செய்து வழிபடுவார்கள்.

இந்த நாள் ஆண்டாள் ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரத்தன்று அம்மனை எந்த முறையில் வீட்டிற்கு அழைத்து, பூஜை செய்ய வேண்டும், எந்த முறையில் பூஜை செய்தால் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆடி மாதத்தில் வரக்கூடிய மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்று ஆடிப்பூரம். இது அன்னை உமாதேவி மற்றும் ஆண்டாள் நாச்சியாரின் அவதாரத் திருநாளாகும்.

சூரியன் சுக்கிரன் சேர்க்கை: மூன்று ராசியினருக்கு கிடைக்கவுள்ள அதிஷ்ட யோகம்!

சூரியன் சுக்கிரன் சேர்க்கை: மூன்று ராசியினருக்கு கிடைக்கவுள்ள அதிஷ்ட யோகம்!

வளைகாப்பு திருவிழா

இந்த நாளில் அம்மனை விரதம் இருந்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமும், நீண்ட காலமாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதனால் இந்த நாளில் அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்து பக்தர்கள் வழிபடும் வழக்கம் உள்ளது. சில கோவில்களில் அம்மனுக்கு வளைகாப்பு திருவிழாவும் ஆடிப்பூரத்தன்று நடத்தப்படுவது வழக்கம்.

ஆடிப்பூர நாளில் திருமணம், குழந்தை வரம் கிடைக்க செய்ய வேண்டிய வழிபாடுகள் | Aadi Pooram 2024 Worship For Marriage And Child

இந்த ஆண்டு ஆடிப்பூரம் இன்று (06) மாலை 06.42 மணிக்கு ஆரம்பமாகி நாளை இரவு 09.03 வரை பூரம் நட்சத்திரம் உள்ளது. நாளை புதன்கிழமை என்பதால் காலை 07.30 முதல் 9 மணி வரை எமகண்ட நேரமும், பகல் 12 முதல் 01.30 வரையிலான நேரத்தில் ராகு காலமும் உள்ளது. இதனால் இந்த நேரங்களை தவிர்த்து விட்டு அம்மனுக்குரிய வழிபாட்டினை செய்யாலாம்.

ஆடிப்பூர வழிபாட்டிற்குரிய நேரமாக காலை 06 மணி முதல் 07.15 வரையும்  09.05 முதல் 10.20 வரையும் கணிக்கப்பட்டுள்ளது.

பிற்போக்காக நகரும் சனி பகவான்: செல்வந்தர்களாக போகும் மூன்று ராசியினர்

பிற்போக்காக நகரும் சனி பகவான்: செல்வந்தர்களாக போகும் மூன்று ராசியினர்


வீட்டில் ஆடிப்பூர வழிபாடு 

ஆடிப்பூர நாளில் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு வளையல் வாங்கிக் கொடுத்து, நம்முடைய வேண்டுதலை சொல்லி வழிபடலாம். திருமணம், குழந்தை வரம் வேண்டுபவர்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் வழிபடுவதால் அம்பிகையின் அருள் கிடைக்கும்.

வீட்டில் ஒரு மனைப்பலகையை கிழக்கு-மேற்காக வைத்து, அதன் மீது மாக்கோலம் போட்டு, சிவப்பு நிறத்துணி இருந்தால் விரித்துக் கொள்ளலாம். சிவப்பு துணி இல்லை என்றால் மாக்கோலமிட்டு அப்படியே வைத்து விடலாம்.

அந்த மனைப்பலகையில் வீட்டில் உள்ள ஏதாவது ஒரு அம்மனின் படத்தை வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து, பூப்போட்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

ஆடிப்பூர நாளில் திருமணம், குழந்தை வரம் கிடைக்க செய்ய வேண்டிய வழிபாடுகள் | Aadi Pooram 2024 Worship For Marriage And Child

அம்மன் படத்திற்கு முன் வளைகாப்பிற்கு சீர் வைப்பது போல் சந்தனம், குங்குமம், வளையல், அக்ஷதை, பூ ஆகியவற்றை தனித்தனி தட்டுக்களில் பரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.

வளையல்களால் அம்மனுக்கு மாலை கட்டி போடலாம். பிறகு அம்மனுக்குரிய மந்திரங்கள், ஸ்லோகங்கள் சொல்லி, அம்மனை அந்த மனையில் எழுந்தருள செய்ய வேண்டும். எதுவும் தெரியாதவர்கள் அபிராமி அந்தாதி படிக்கலாம்.

பிறகு அக்ஷதை, பூ ஆகியவற்றை அம்மனின் காலடியில் சம்பித்து வழிபட வேண்டும். அம்மனுக்கு ஆரத்தி கரைத்து திருஷ்டி கழிக்க வேண்டும்.

நெருங்கும் சனிப்பெயர்ச்சி: இரட்டிப்பு பலன்களை அள்ளப்போவது இவர்கள் தானாம்..!

நெருங்கும் சனிப்பெயர்ச்சி: இரட்டிப்பு பலன்களை அள்ளப்போவது இவர்கள் தானாம்..!


திருமணம், குழந்தை வரம் பெறுவதற்கான வழிபாடு 

அம்மனின் படத்தை எடுத்து, பூஜை அறையில் எப்போதும் வைக்கும் இடத்தில் வைத்து விடலாம். அந்த மனைப்பலகையை வீட்டின் கூடத்திற்கு எடுத்து வந்து யாருக்கு திருணம் ஆக வேண்டுமோ அல்லது யாருக்கு குழந்தை வேண்டுமோ அவர்களை அமர வைத்து, அம்மனுக்கு செய்தது போல் நழுங்கு வைத்து, ஆரத்தி காட்ட வேண்டும்.

அக்ஷதை, பூக்கள் தூவி அவர்களை வாழ்த்திய பிறகு அந்த பெண்ணின் கைகளில் வளையல்கள் மாட்டி விட வேண்டும். அம்மன் அமர்ந்த இடத்தில் நாமும் அமர்ந்து இந்த சடங்குகளை செய்வதால் நம்முடைய வேண்டுதல் நிறைவேற நிச்சயம் அம்மன் அருள் செய்வாள்.

ஆடிப்பூர நாளில் திருமணம், குழந்தை வரம் கிடைக்க செய்ய வேண்டிய வழிபாடுகள் | Aadi Pooram 2024 Worship For Marriage And Child

பிறகு அப்படியே எழுந்து சென்று பூஜை அறையில் அம்மனிடம் வேண்டிக் கொண்டு, அம்மனின் முன்பு விழுந்து வணங்க வேண்டும்.தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, குழந்தை வரம் வேண்டும் பெண்ணின் முந்தானையில் நிரப்பி, பூஜை அறையில் சென்றும் வழிபடலாம்.

இந்த தேங்காயை அடுத்த நாள் ஏதாவது இனிப்பு செய்து சாப்பிடலாம். காரமான உணவுகள் சமைப்பதற்கும், வழக்கமான உணவு சமைப்பதற்கும் பயன்படுத்தக் கூடாது.

இந்த முறைகளில் அம்மனை வழிபட்டு அருளினைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஜூலை மாதத்தில் அதிர்ஷ்ட மழையில் நனையபோகும் 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா!

ஜூலை மாதத்தில் அதிர்ஷ்ட மழையில் நனையபோகும் 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023