மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பும் அதிரடி நாயகன்
தென்னாபிரிக்காவில்(south africa) மட்டுமன்றி உலகமெங்கும் கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஏ பி டிவில்லியர்ஸ்.(ab de villiers) வித்தியாசமான ஷொட்களும் அதிரடியான ஆட்டமும்தான் அவரை ரசிக்க வைக்கிறது.
அதேபோல் ஒருவர் அடிக்கும் பந்து மைதானத்தின் அனைத்து இடங்களில் செல்லும் என்றால் அது டிவில்லியர்ஸ்தான். இவர் செல்லமாக 360 என்றும் அழைக்கப்படுகிறார்.
பார்வை குறைபாடு
இப்படி கிரிக்கெட்டில் கால்பதித்த நாள் முதல் தனக்கென ஒரு தனி சாம்ராஜியத்தையே உருவாக்கிய இவர் பார்வை குறைபாடு காரணமாக விரைவாகவே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
பின்னர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் கிரிக்கெட் குறித்து பேசி வருகிறார். அவ்வபோது வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு
இந்த நிலையில், மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவதாக பேசி உள்ளார் டி வில்லியர்ஸ்.
அதில், நான் மீண்டும் கிரிக்கெட் விளையாடலாம் என்று நினைக்கிறேன். உறுதியாக இல்லை. ஆனால் நான் அதை உணர ஆரம்பித்துவிட்டேன். எனது குழந்தைகள் எனக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுக்கிறார்கள். அவர்களுடன் வலைப்பயிற்சிக்கு செல்லலாம் என நினைக்கிறேன்.
என்னுடைய கண்கள் இப்போது நன்றாக உள்ளன. அதனால் நான் களத்திற்கு சென்று பந்துகளை எதிர்கொள்ள விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் உள்ளூர் போட்டிகள் விளையாடுவாரா அல்லது சர்வதேச போட்டிகளில் விளையாடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |