மாகாணசபையை ஒழியுங்கள் : இந்தியாவும் அழுத்தம் கொடுக்கவில்லை : தென்னிலங்கையில் எழுந்த புதிய குரல்
வடக்கில் இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஸ்தாபிக்கப்பட்ட மாகாண சபை முறைமை இனியும் நாட்டுக்கு சுமையாக இருக்கக் கூடாது என லங்காலோகய அமைப்பின் பிரதம அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தென் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் என்ற வகையில் மாகாண சபையின் பொய்களை நன்கு புரிந்து கொண்டதாக தெரிவித்த அவர் இவ்வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தோற்றவுள்ள வேட்பாளர்களின் கவனத்திற்கு இந்த விடயத்தை தமது அமைப்பு முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
லங்காலோகய என்ற புதிய அமைப்பின் தலைமையில் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் உரையாற்றிய அவர்,
1988 ஆம் ஆண்டிலிரு்து செலவான தொகை
1988 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மாகாண சபைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏழாயிரம் பில்லியன்களை செலவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அரசாங்கம் கொடுத்த பணத்தில் ஒரு பகுதியை செலவழித்துவிட்டு தனது பெயருடன் கதிரைகள், கூடாரங்கள் போன்றவற்றை விநியோகம் செய்வதை தவிர வேறு எதையும் செய்யவில்லை.
உள்ளூராட்சி நிறுவனங்களின் ஊடாக அரசாங்கத்தினால் பல வேலைகளை செய்ய முடியும் எனவும் தெரிவித்த அவர், இனி மாகாண சபையின் வெள்ளை யானையை பேண வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட அழுத்தம் கொடுக்கவில்லை
மாகாணசபை மக்கள் பிரதிநிதிகள் இன்றி ஐந்து வருடங்கள் கடந்துள்ளதால், இனி அது தேவையில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
“மாகாணசபைகளை மீள அமைக்குமாறு வடக்கில் கூட எவரும் கோராத நிலையில் மாகாண சபைகளை தொடர்ந்தும் நடத்துவதற்கு எந்த காரணமும் இல்லை.
இந்தியா கூட மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் மாகாண சபைகளை தொடர்வதற்கு எந்த காரணமும் இல்லை” என்றும் அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |