இராணுவ அதிகாரிகளுக்கு பாரபட்சம் - நிறுத்தப்பட்ட சலுகை..!
Sri Lanka Army
Sri Lanka
By Kiruththikan
இராணுவத்தின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகையொன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்படும் பண்டிகை முற்பணத் தொகை இம்முறை இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு மட்டும் இந்த முற்பணத் தொகை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
முற்பணத் தொகை
சம்பளத்தில் பிடித்துக் கொள்ளப்படும் இந்த முற்பணத் தொகை கடற் படை, விமானப் படைகளைச் சேர்ந்த அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், இராணுவத்தினருக்கு இந்த முற்பணத்தொகை வழங்கப்படவில்லை.
குறிப்பாக இராணுவ அதிகாரிகளுக்கு முற்பணத் தொகை வழங்கப்படவில்லை எனவும் இராணுவ வீரர்களுக்கு மட்டும் முற்பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி