64 பொருட்களுக்கான விசேட வர்த்தக வரி நீக்கப்பட்டுள்ளது
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lanka Cabinet
By Sathangani
நாட்டில் சுமார் 64 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட விசேட வர்த்தக வரி நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை சிறிலங்கா அமைச்சரவை நேற்று (25) வழங்கியுள்ளது.
இந்த வரியை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாக இதனை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்ட வரைவை உருவாக்குதல்
210 HS குறியீடுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட 64 வகையான பொருட்கள் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் அதிபர்,
மேற்படி சட்டத்தை இடைநிறுத்துவதற்கான சட்ட வரைவை உருவாக்குமாறு சட்ட வரைவாளர்களுக்கு
அறிவுறுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |