தொலைபேசி அழைப்பில் 2 கோடி ரூபா மோசடி - தீவிர விசாரணையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Dharu
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தொலைபேசி நிறுவனம் ஒன்றிற்கு சுமார் 2 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்செயல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நிறுவனத்தின் முகாமையாளர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறை
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் மே மாதம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகள் பெறப்பட்டுள்ளன.
குறித்த அழைப்பால் 53,983 அமெரிக்க டொலரை மோசடி செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை வழங்கியுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்