மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள்
Uva Wellassa University
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
எரிபொருள் தட்டுப்பாடு
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று (ஜூன் 29) முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
ஒன்லைனில் விரிவுரைகள்
எனினும், விரிவுரைகளை ஒன்லைனில் வழங்குவது தொடரும் என்று அவர் மேலும் கூறினார். "எரிபொருள் நெருக்கடி தீர்ந்தவுடன் மாணவர்களை மீண்டும் பல்கலைக்கழக வளாகத்திற்கு அழைத்து வருவோம் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று துணைவேந்தர் மேலும் கூறினார்.
இறுதியாண்டு மாணவர்களின் ஆராய்ச்சித் திட்டங்கள் தடையின்றி தொடரும் என பேராசிரியர் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
