வெளிச்சத்துக்கு வந்த பிள்ளையானின் கொலை பட்டியல்: கசிந்தது தகவல்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் (Pillayan) நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் படுகொலைகள் தொடர்பில் பல உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்பான விசாரணைகள் சமீபத்திய நாட்களில் தொடர்கின்றன.
குறிப்பாக மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் புலனாய்வுதுறை கவனம் செலுத்துகின்ற நிலையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சிஐடியினர் தலைமையிலான விசாரணைகளில் கணிசமான அளவு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புலனாய்வு அதிகாரி
2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு பகுதியில் ஒரு காவல்துறை புலனாய்வு அதிகாரி மற்றும் ஒரு இளைஞர் சுட்டுக் கொன்ற சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு காத்தான்குடி பகுதியில் புலனாய்வு அதிகாரி சுட்டுக் கொன்றதில் பிள்ளையானின் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோதே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டின் விளைவாக இருவரும் மரணித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, 2007-2008 காலகட்டத்தில் ஒரு தொழிலதிபர் கொல்லப்பட்டதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.
பல முகாம்
இந்த சம்பவம் மட்டக்களப்பு பகுதியில் நடந்ததாகவும், பாதிக்கப்பட்டவர் ஒரு குள பகுதி வழியாக படகில் பயணித்தபோது சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த தகவல்கள் அனைத்தும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமல் போனது மற்றும் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வழக்குக்கு கூடுதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்படி கிழக்கு மாகாணம் முழுவதும் பல முகாம்களை பிள்ளையான் நடத்தி வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த முகாம்கள் தன்னை எதிர்க்கும் நபர்களைத் தடுத்து வைக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இந்த முகாம்களில் தற்போது குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பின்னணியில்தான் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) நெருங்கிய சகாக்கள் கைது செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
