கனேடிய காவல்துறையுடன் ஒன்று சேரும் சிறிலங்கா காவல்துறை: கிடைத்தது அனுமதி!
Sri Lanka Police
Sri Lankan Peoples
Canada
By Dilakshan
இலங்கை காவல்துறை மற்றும் றோயல் கனடாவின் குதிரைப்படை காவல்துறை (RCMP) இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், சந்தேக நபர்கள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக்கொள்வது மற்றும் கூட்டு நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப விடங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமைச்சின் ஒப்புதல்
இதன்படி, முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
இந்தத் தீர்மானத்தை பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் முன்வைத்திருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
