விமல் வீரவன்சவுக்கு வலை விரித்த சிஐடி!
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவுக்கு(Wimal Weerawansa) அழைப்பாணை விடுத்துள்ளது.
அதன்போது, நாளை (ஜூலை 9) காலை 9:00 மணிக்கு அதன் சிறப்பு புலனாய்வுப் பிரிவு 4 இல் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட 323 கொள்கலன்களை இலங்கை சுங்கத்துறை முறையான ஆய்வு இல்லாமல் விடுவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்த அழைப்பாணை விடுத்துள்ளது.
வாக்குமூலம்
இதன்படி, ஜனவரி 29, 2025 அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தொடர்பாக வீரவன்ச தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் வாக்குமூலம் அளிக்கவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இதற்கு முன்னதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போது, கொடுக்கப்பட்ட திகதியில் முன்னிலையாக முடியாது என்று அறிவித்து ஒரு புதிய திகதியை விமல் வீரவன்ச கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
