ஏ9 வீதியில் விபத்து - ஒருவர் பலி
accident
death
road
a9
By Vanan
ஏ-9 வீதி, கிளிநொச்சி - இரணைமடு சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்த ஹயஸ் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மழை காரணமாக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி