யாழ்ப்பாணத்தில் கோர விபத்து : ஸ்தலத்தில் பெண் பலி
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sumithiran
யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண்ணொருவர் ஸ்தலத்தில் உயிரிழந்தார்.
நீர்வேலி இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பொங்கல் நிகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை எதிரே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது டிப்பர் வாகனம் மோதியது.
ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவம்
குறித்த வாகனம் மூதாட்டியை மோதி தள்ளியதில் ஆலயத்தில் இருந்த மூதாட்டி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நீர்வேலி மேற்கைச் சேர்ந்த தனபாலசிங்கம் மகேஸ்வரி ஐந்து பிள்ளைகளின் தாயான (72 வயது) என கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கோப்பாய் காவல்துறையினர் விசாரணை
விபத்து தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி