வவுனியாவில் கோரவிபத்து - இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலி
Vavuniya
Sri Lanka Police Investigation
Accident
Death
By Sumithiran
வவுனியா நைனாமடு பகுதியில் இன்று (16.05) இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியானதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார்.
நெடுங்கேணி பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த செட்டிகுளம் கப்பாச்சியை சேர்ந்த 23 வயதுடைய ராமலிங்கம் அனுசன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார்.
பட்டா ரக வாகனத்தில் மோதுண்டு விபத்து
அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் முன்னாள் சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனத்தில் பின்புறமாக மோதுண்டு இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன் காரணமாக மோட்டார் சைக்கிளை செலுத்திய அனுசன் பலத்த காயமடைந்து மரணமடைந்ததுடன், மனைவி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
இவ் விபத்து தொடர்பாக புளியங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்