சைக்கிளில் சென்றவரை மோதித்தள்ளிய யாழிலிருந்து சென்ற கார்
Sri Lanka Police
Kilinochchi
Accident
By Thulsi
ஏ9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று (02.09.2026) கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி - விளாவோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஏ9 வீதியால் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக பயணித்த கார் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்த சைக்கிளில் சென்ற நபர் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் காரின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி