இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்
Economy of Sri Lanka
Low Income
Aswasuma
By Thulsi
2026 ஆகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அந்தவகையில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.
அஸ்வெசும வங்கிக் கணக்குகள்
இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 618,352 முதியோர்களுக்காக 3,091,760,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 78,260 முதியோர்களுக்காக 391,300,000 ரூபாய் நிதி வைப்பிலிடப்படவுள்ளது.
உரிய பயனாளிகள் இன்று (3) முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி