கொழும்பு - ரத்தினபுரி வீதியில் விபத்து! 20 பேருக்கு காயம் - ஐவர் கவலைக்கிடம் (படங்கள்)
Colombo
Accident
By Vanan
கொழும்பு - ரத்தினபுரி பிரதான வீதியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்து வழுக்கிச் சென்று சொகுசு பேருந்துடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
ஐவர் கவலைக்கிடம்
சொகுசுப் பேருந்து முன்னோக்கி நகரந்தமையினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் வான் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



