நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் பாரிய விபத்து (படங்கள்)
Screen 4 screen
Kandy
Nuwara Eliya
Accident
By Vanan
நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லொறி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
நுவரெலியா, பம்பரகெல டொப்பாஸ் பகுதியில் குளியாப்பிட்டியிலிருந்து நுவரெலியாவிற்கு கோழி உரத்தை ஏற்றி பயணித்த லொறியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த வீதியில் உள்ள வளைவு ஒன்றில், லொறி கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியையும் உடைத்துக்கொண்டு தேயிலை தோட்டத்தில் விழுந்துள்ளது.
இதன்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் இரு உதவியாளர் இருந்துள்ளனர். எனினும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் அம்மூவரும் உயிர் தப்பியுள்ளனர்.
லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி