புத்தளத்தில் கோர விபத்து
Sri Lanka Police
Colombo
Puttalam
Sri Lankan Peoples
By Dhilak
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்ததொன்றில் 09 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது, நேற்று(30) இரு மகிழுந்துகள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் இரு மகிழுந்துகளிலும் பயணித்த மூன்று சிறுவர்கள் உட்பட 09 பேர் காயமடைந்த நிலையில் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அதில் எட்டு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில் விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |