ஹட்டனில் மோட்டார் சைக்கிள் விபத்து - இளைஞன் பலி
Sri Lanka Police
Accident
By pavan
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, தியகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று பிற்பகல் 3.30 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
குளியாப்பிட்டிய பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்துகொண்டிருந்த 'கல்' லொறியும், ஹட்டனில் இருந்து கினிகத்தேன நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுமே விபத்துக்குள்ளாகியுள்ளன.
மழையுடனான காலநிலை
வீரபிட்டிய, மொரகஹாபள்ளம பிரதேசத்தைச் சேர்ந்த பிரதிப் குமார அஸ்விஸ் (வயது - 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து நடைபெறும்போது வட்டவளை பகுதியில் மழையுடனான காலநிலை நிலவியுள்ளது.
எனவே, மோட்டார் சைக்களில் வந்தவர் வழுக்கிச்சென்று, லொறியின் பின்பகுதி சிக்கில் சிக்குண்டார் என தெரியவந்துள்ளது.



புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி