சொன்னதை செய்தது ஹமாஸ் : வீடு திரும்பினார் அமெரிக்க பிணைக்கைதி
கடந்த 2023 ஒக்டோபர் 7-ஆம் திகதி இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலியரான ஈடன் அலெக்ஸாண்டரை ஹமாஸ் அமைப்பு திங்கள்கிழமை விடுவித்தது.
சா்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் அவா் ஒப்படைக்கப்பட்டதாகவும், கிஸுஃபும் எல்லை வழியாக காஸாவில் இருந்து அவா் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ரொய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஹமாஸிடம் பிணைக் கைதியாக இருந்த கடைசி அமெரிக்க-இஸ்ரேலியா்
ஹமாஸிடம் பிணைக் கைதியாக இருந்த கடைசி அமெரிக்க-இஸ்ரேலியா் ஈடன் அலெக்ஸாண்டா் என்பது குறிப்பிடத்தக்கது.
அலெக்சாண்டரின் விடுதலையை "மிகவும் நெகிழ்ச்சியான தருணம்" என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார் - மேலும் ட்ரம்பின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
போர் நிறுத்தம் இருக்காது
ஹமாஸ் மீதான இராணுவ அழுத்தம் மற்றும் "ஜனாதிபதி ட்ரம்ப்பின் அரசியல் அழுத்தம்" காரணமாக இந்த விடுதலை சாத்தியமானது என்று நெதன்யாகு கூறினார்.
காசாவில் தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் திட்டங்களை இஸ்ரேல் தொடர விரும்புவதாகவும், போர் நிறுத்தம் இருக்காது என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
இதேவேளை அலெக்சாண்டரின் விடுதலை புதிய போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கான ஊக்கமளிக்கும் அறிகுறி என்று கத்தார் மற்றும் எகிப்து தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
