தன்னுயிரை தியாகம் செய்த தாயின் இறுதி கிரியை - உயிர் பலி எடுத்த கோரவிபத்து
தன்னுயிரை தியாகம் செய்து, தன்னுடைய பிள்ளையின் உயிரை காப்பாற்றிய அந்த தாயின் இறுதி கிரியை இடம்பெறவுள்ளது.
சம்பவத்தில் மரணமடைந்த காசிநாதன், தனலட்சுமி ஆகிய இருவரின் பூதவுடல்களும், கொஸ்லாந்தை மீறியபெத்த எஸ் கே டிவிசைன் பொது மயானத்தில், செவ்வாய்க்கிழமை (13) மாலை 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
கொஸ்லாந்தை மீறியபெத்த எஸ் கே டிவிசைனைச் சேர்ந்த இவர்கள் உறவினர் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
விசேட விசாராணைக் குழு
கொத்மலை - கரடி எல்லா பகுதியில் 11.05.2025 அன்று அதிகாலை 4.30க்கு விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர், 45 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
பேருந்து விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தலைமையில் விசேட விசாராணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தாயின் புகைப்படங்கள்
இந்த விபத்தில், தனது 9 மாதங்களேயான மகளை, காப்பாற்றுவதற்கு பெரும் பாடுபட்ட தாயின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
பேருந்தின் அடியில் சிக்கி இடையின் கீழ்ப்பகுதி துண்டிக்கப்பட்ட நிலையிலும் தாய் தன் ஆறுமாதக் குழந்தையை பாதுகாத்து பிழைக்க வைத்திருந்தார். அந்த தாய், சேயுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அந்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருடைய 9 மாதங்களேயான குழந்தை பேராதனை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், அந்த தாய், தந்தை மற்றும் 9 மாதங்களேயான குழந்தையுடன், தங்களுடைய ஏனைய நான்கு பிள்ளைகளும் சிக்கியுள்ளனர். காயமடைந்த நான்கு பிள்ளைகளும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
